சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு கேள்வி?
அது என்னங்க சார் சென்னைல கனமழை பெய்தாலோ அல்லது சென்னையில் புயல் கரையைகடக்கும்னு ரமணன் சொன்னாலோ மட்டும் தமிழ்நாடு முழுக்க உங்க கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிக்கெள்ளாம் விடுமுறை விட்டு தேர்வையும் ஒத்தி வைச்சுடுரீங்க.
அது 100% சரி
இன்னிக்கு இதே சென்னையில மழையில்லாம தென் மாவட்டம் முழுக்க மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது புயலும் உருவாகிருக்கு அப்ப கூட நாளை வழக்கம் போல் தேர்வுகள் நடைபெறும்னு சர்வசாதாரணமா அறிக்கை விடுரீங்க.
சென்னையில இருக்குரன் மட்டும் தான் மாணவனா மத்த தென் மாவட்டத்துல உள்ளவனெல்லாம் வேர யுனிவர்சிட்டிலயா படிக்கிரான்.
சென்னையில மட்டும் தான் வெள்ளம் வந்தா தேர்வெழுத முடியாதா
மத்த மாவட்டத்துக்காரனெல்லாம் வெள்ளத்துல நீச்சல் அடிச்சு வந்தா எழுதுவான்.
நாங்களும் இதே தமிழ்நாட்டுல தான் இருக்கோம். எங்க ஊர்லயும் மழை வெள்ளம் போயிட்டுதான் இருக்கு (தென் மாவட்டங்கள்)
திரு. சென்னை அண்ணா யுனிவர்ஸிட்டி நிர்வாகமே உனக்கு ஒன்று வானிலை தெரிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் கருணையாவது இருக்க வேண்டும்.
இரண்டுமில்லையென்றால் தயவுசெய்து நிர்வாகத்தை தென் மாவட்டமான திருச்சியிடம் பாதி நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடு.
இங்கே மாணவர்களாகிய நாங்கள் தொடர் மழையால் உடல்நலலன் பாதிக்கப்பட்டும் வீட்டுக்குள் நீர் புகுந்தும் வாடிக்கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் நீயோ சென்னையில் நிலமை சீராகி வருவதை தொடர்ந்து நாளை தேர்வை அறிவிக்கிறாய்.
வேண்டுமானல் வானிலை திரு.ரமணன் அவர்களிடம் நிலவரத்தை கேட்டரிந்து உனது தேர்வு தேதிகளை அறிவிப்பு செய். இல்லையெனில் சென்னையில் மட்டும் தான் தேர்வெழுத மாணவர்கள் வருவார்கள்.
இது எனது கோரிக்கையல்ல மழையில் ஊரிப்போய் கிடக்கும் தென் மாவட்ட மாணவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.
இந்த வாரம் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. என்கிற அறிவிப்பு உங்களிடமிருந்து இன்று இரவுக்குள் வரும் என்று நினைக்கிறேன்.
நன்றி!!!
இதை படித்துவிட்டு சென்னை அண்ணா யுனிவர்சிட்டியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் Share செய்யுங்கள்.
நற்செய்தி கிட்டும்...