முந்திரிபழம்!
முந்திரியை ஆங்கிலத்தில் கேஷ்யூ என்பர். முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. அமெரிக்காதான் இதன் தாயகம். முந்திரி இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.வறட்சியை தாங்கி வளரும் மரப்பயிர்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.
ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு.
நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.
ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.
வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.
முந்திரிபழம் உடற்சூட்டைத் தரும். சிறுநீர்ப் பெருகும் நீர் வேட்கையை நீக்கும். நெஞ்சில் கரகரப்பு ,கரப்பான் நோய் ஆகியவற்றை தீர்க்கும். உவர்ப்பு சுவையுடைய பழச்சாறு வந்தி எடுப்பதை தடுக்க உதவும். தொண்டை நோய்களில் வாய் கொப்பளிக்க உதவும் மருந்தாகவும் உதவுகிறது. பழத்தில் வைட்டமின் 'சி' அதிகமுள்ளது .சளியை போக்கும். இது உடலை வளர்க்கும் காமத்தைப் பெருக்கும்.பசியை நீக்கும் .
பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
அத்திப்பழங்களையும், முந்திரி பழங்களையும் அதிக அளவில் அன்றாடம் இரண்டு, மூன்று மாதங்கள் உண்டு வந்தால் எத்தகைய குஷ்ட நோயானாலும் நிச்சயம் நிவாரணம் பெறலாம்.
கொட்டை :
முந்திரிகொட்டையின் தடித்த மெல்தொலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பாதத்தில் உண்டாகியுள்ள பித்த வெடிப்பிற்கு தடவலாம் .எண்ணெய் தோலின்மீது பட்டால் கொப்புளத்தை உண்டாக்கும். பருக்கள் ,குருக்கள் ,புடைகள் மீது கவனமாகத் தடவிவர அவை நீங்கும்.
பட்டை :
இம்மர வேர்ப்பட்டை குடிநீர் , நீரிழிவு நோய்க்கு உதவும் .