பசியின்றி சோர்வாக
இருந்தால் பசி ஏற்பட
என்ன சாப்பிடலாம்?.
பசியில்லாமல்
சோர்வாக இருந்தால்
சாப்பிடாமல்
பட்டினி கிடப்பதே
நல்லது. நமது
உடலின்
சக்தியானது நமது
உடலை இயக்காமல்
வேலை நிறுத்தம்
செய்யவில்லை. உள்
உறுப்புக்களை
பழுதுபார்க்கவும்
கழிவுகளை
வெளியேற்றவும்
தன் சக்தியை
பயன்படுத்துகிறத
ு. நன்றாக ஓய்வு
எடுங்கள். தாகம்
எடுத்தால் நீர்
அருந்துங்கள் .
மலச்சிக்கல்
இருந்தால் எனிமா
எடுத்துக்
கொள்ளுங்கள். பசி
எடுக்க
ஆரம்பித்ததும்
பழங்களை மட்டும்
உணவாக
சாப்பிடுங்கள்.
சிறிது சிறிதாக
தினசரி உணவிற்கு
வாருங்கள்.
பசிக்காமல்
சாப்பிடும் உணவு
ருசிக்காது. நாக்கே
வேண்டாமென்கிறது
. சிலருக்கு
வாய்க்கசப்பு
ஏற்படும். எந்த
உணவும் கசப்பு
சுவையுடனேயே
இருக்கும்.
அதையும் தாண்டி
சாப்பிட்டால்
செரிமானக்கோளாறு
ஏற்படும்.
நோய்களை
வரவேற்பதாக
அமைந்துவிடும்.
நீங்கள் கட்டாயம்
வேலை செய்தே
தீரவேண்டுமெனில்
வேலை செய்ய
துவங்கினால்
உடலின் சக்தி
பழுதுபார்க்கும்
வேலையை
நிறுத்திவிட்டு
உங்கள் வேலைக்கு
உதவியாக வந்து
சேரும். பசி
எடுக்கும். ஆனால்
நீங்கள் உங்கள்
வேலையை
முடித்துவிட்டோ
அல்லது
எப்படியேனும்
உடலுக்கு ஓய்வை
கொடுத்து
விரதத்லை
அனுசரிக்க
வேண்டும். இந்த
அறிகுறிகள்
சாதாரணமாக
தோன்றினாலும்
பின்னால் காய்ச்சல்
பேதி போன்ற
தொந்தரவுகள்
ஏற்பட்டு கட்டாய
ஓய்வுக்கு
ஆளாக்கிவிடும்.
இது வேறு
பசியுடன் சோர்வாய்
இருப்பது வேறு.
பசியின்றி
சுறுசுறுப்புடன்
இருப்பது வேறு.
எனவே உடலின்
மொழியை புரிந்து
கொண்டு அதற்க்கு
ஒத்துழைப்போம்.
No comments:
Post a Comment