VMware workstation & VirtualBox- ஒரு பார்வை
VMware workstation & VirtualBox பற்றி சிலருக்கு தெருந்திருப்பினும் பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை இதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க இருகிறோம். VMware workstation என்பது மாயை வன்பொருள்களை ஏற்படுத்தி அவற்றின் உதவியுடன் இயங்குதளத்தை நிறுவி பார்க்க உதவும் மென்பொருள் ஆகும். புதியதாக இயங்குதளங்களை நிறுவ ஆசைபடும் கணினி வல்லுனர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம். மேலும் மாணவர்கள் பலருக்கு தங்களுடைய கணினில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை தாங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுடைய கணினி அதனை ஆதரிக்க கூடியதாக இருக்காது. இந்த சூழ்நிலையில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு இயங்குதளங்களை தாங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்த முடியும்.
மேலும் மாணவர்களுக்கு இயங்குதளங்களை நிறுவ பயிற்ச்சி அளிக்கும் போது இந்த மென்பொருள்களை பயன்படுத்தி எளிமையாக பயிற்ச்சி அளிக்க முடியும்.
VMware workstation பதிவிறக்க சுட்டி
VirtualBox பதிவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று மென்பொருள்களை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இதில் VirtualBox ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும் எனவே இது இலவசமாக கிடைக்கிறது. ஆனால் VMware பணம் செலுத்தினால் மட்டுமே முழுமையாக பெற முடியும். இதில் VMware Workstation யை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு செய்யவும்.
நீங்கள் வழக்கம்போல் கணினில் இயங்குதளத்தை நிறுவி அதற்குள்ளும் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த முடியும். இந்த முறைமையை பயன்படுத்தி லினக்ஸ் இயங்குதளங்களையும் நிறுவ முடியும். பயன்படுத்தி பாருங்கள் அருமையான மென்பொருள். இந்த மென்பொருள்களை பயன்படுத்தி நமது தேவைகேற்ப எத்தனை இயங்குதளங்களை வேண்டுமெனினும் நிறுவி பயன்படுத்த முடியும். ஒரு அளவிற்கு மேல் சென்றால் கணினி மந்தமாக செயல்பட தொடங்கிவிடும்.
No comments :
Post a Comment