
ஒருமுறை காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது அவரிடம் ஒரு கலெக்டர் ஒரு கட்டு பைலை கொடுத்தார்..மெடிக்கல் கல்லூரிகளில் அரசு கோட்டா என ஒன்று உள்ளது..அதில் முதல்வரின் கீழ் 10 மருத்துவ சீட்கள் தரமுடியும் என இருந்தது..அதை காமராஜர் வாங்கிய சிறிது நேரத்தில் 10 பேரை தேர்ந்தெடுத்தார்..அந்த கலெக்டர் வியப்புடன் கேட்டார்,எப்படி ஐயா இவ்வளவு பேர் அடங்கிய பட்டியல் உள்ள பைலில் இவ்வளவு சீக்கீரமாக இவர்களை தேர்ந்தெடுத்தீர்கள் என்றார்.. அதற்கு சிரித்துக் கொண்டே கூறினார்..யார் யாருடைய விவரங்கள் அடங்கிய பைல்களில் பெற்றோர்கள் கையொப்பம் என்ற இடத்தில் கைநாட்டு இருக்கிறதோ அவர்களின் பிள்ளைகள் தான் டாக்டராக வர வேண்டும் என்று கூறினார்..அதுதான் நம் காமராஜர்..தன்னால் படிக்க முடியாவிட்டாலும் ஏழைகள் கல்வி கற்க வேண்டும்,ஏழை மாணவர்கள் மருத்துவராக வரவேண்டும் என்று நினைத்தார்..ஆனால் இன்று இந்த காவிகள் ஏழைகள் படித்து முன்னேற கூடாது..!! அவ்வளவு ஏன் வாழக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள்..!! #RIPAnitha
No comments :
Post a Comment