Monday, 7 September 2015

தனி ஒருவன் ரீமேக் ஹீரோ யார்?


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடித்து கடந்த மாதம் 28ம் தேதி வெளியான தனி ஒருவன் படம் இரண்டாவது வாரத்தைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் வார முடிவில் இப்படத்தின் வசூல் சுமார் 30 கோடி வரை இருக்கும் என தெரிகிறது. இந்த வெற்றியை அறிந்த டோலிவுட் நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் படத்தைப் பார்த்துள்ளனர். தெலுங்குத் திரையுலகில் ராம் சரண் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
ரீமேக் உரிமையை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையையும் ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் ராம்சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார்.
தென்னிந்திய ரீமேக்குகளில் நடித்துத் அதிக வசூலை அள்ளும் சல்மான்கான் அவருடைய தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைப் பார்த்துள்ளனர். ஆனால், அதன் பின் அது பற்றிய எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
தனி ஒருவன் படம் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக்கானால் மோகன் ராஜாவே இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர்கள் இயக்குவார்களா என்பது படத்தின் ரீமேக் விற்பனை முடிந்த பிறகே தெரிய வரும்.

No comments:

Post a Comment