Sunday, 28 June 2015

பெண்களுக்கு இணையதள கல்வி : கூகிளின் புதிய திட்டம் தொடக்கம்

-----------------------------------------
இந்திய கிராமப்புற பெண்கள் இடையே இணையதள விழிப்புணர்வை ஏற்படுத்த கூகிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம பெண்களுக்கு இணையதள கல்வியை வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்றும், இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பெண்களுக்கு சொல்லித் தரப்படும் என்றும் கூகிள் நிறுவன இயக்குனர் சந்தீப் மேனன் தெரிவித்தார். கிராமப்புறங்களை சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இணையதள கல்வி அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment