Sunday, 14 June 2015

நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
தற்போது விவேக் ஜோடியாக நடித்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீசுக்கு தயாராகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
சோனியா அவர் கூறியதாவது:–
பன்னிரெண்டு வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சிறிய இடைவெளிக்கு பிறகு ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் நடித்தேன். காமெடி படமாக தயாராகியுள்ளது. இதற்கு முன்பு இப்படி கலகலப்பான காமெடி படத்தில் நடித்தது இல்லை.
சினிமாவுக்கு மீண்டும் வந்ததை தொடர்ந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்துள்ளேன். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். பாலக்காட்டு மாதவன் படத்தில் கொஞ்சம் குண்டாக தெரிய வேண்டும் என்பதற்காக உணவில் ‘சிக்கன்’ சேர்த்து சாப்பிட்டேன்.
நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதுமாதிரி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
இப்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

No comments:

Post a Comment