Monday, 18 May 2015

ஒன் இன்கிரிடண்ட் இட்லி!

ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்து இட்லி, தோசை, மற்றும் அடை செய்வதை இந்தச் சமையல் குறிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள் :

பாசிப்பருப்பு (ஆம், பாசிப்பருப்பு மட்டும் போதும்)

செய்முறை:

மிக்ஸியில் பாசிப்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்துக் கொள்ளவும். அதை உப்பு போட்டு கலந்து ஆறு மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.

குறிப்பு :

1. தேவையென்றால் தோசையாகவும் சுட்டுக் கொள்ளலாம்.
2. வேண்டுமெனில் கடுகு உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்துருவல் தாளித்துபோட்டு அடையாகவும் சுட்டுக்கொள்ளலாம்.
3. இதற்குத் தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

Thanks  :  இனியவள்

No comments:

Post a Comment