************************************
மிகவும் டயட் கான்ஷியஸ் ஆக இருப்பவர்களின் பெரும் பிரச்சினை வாய்க்கு ருசியான உணவுகளை சமைப்பது.
பச்சைக் காய்கறிகளும் பழங்களும் அலுத்துப் போகும்போது, அருமையான மாற்று உணவு இந்த அரை வேக்காட்டுச் சமையல் முறையில் சமைக்கப்படும் காய்கறி உணவுகள்.
இதில் உள்ளது பரங்கிக்காய் எனப்படும் மஞ்சள் வண்ணப் பூசணி.
பூசணியைப் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதோடு நறுக்கிய சின்ன வெங்காயம், ஒரு சின்னத்துண்டு பச்சை மிளகாய், சிறிது உப்பு (உப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கட்டும்) சேர்த்து, காய் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மூடி வைக்கவும். 4 அல்லது 5 நிமிடம் போதும். அடுப்பை அணைக்கவும்
மூடியைத் திறந்து இரண்டு ஸ்பூன் தேங்காய்த்துருவல், நறுக்கிய மல்லித் தழை சேர்த்தால் ...
எளிமையான, எண்ணெய் சேர்க்காத, சத்தான , அளவான காரம் உப்பு சேர்ந்த சுவையான உணவு தயார்.
காய் வேக வைத்த அந்தத் தண்ணீரோடு, சேர்த்து உண்ண, சுவை அபாரமாய் இருக்கும். ஒரு பெரிய கப்பில் எடுத்துக் கொண்டால், நன்கு பசி தாங்கும்.
இந்த முறையில் காலிஃப்ளவர், கேரட், சுரைக்காய், நீர்ப்பூசணி, பீர்க்கங்காய் போன்ற காய்களையும் கூட அரை வேக்காட்டில் சமைத்து உண்ணலாம்.
No comments:
Post a Comment