Monday, 4 May 2015

மாம்பழ ஸ்ரீகண்ட்

தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத தயிர் - 250 கிராம்
மாம்பழ கூழ் - 1/2 கப்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க
 
செய்முறை :

தயிரை முதல் நாள் இரவே மெல்லியதுணியில் கட்டி தொங்கவிடவும். மறுநாள் கெட்டிதயிர் கிடைக்கும்.அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை கரைந்ததும் மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கி பிஸ்தா பருப்பு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

No comments:

Post a Comment