எனக்கு இளம் வயதிலிருந்தே எல்லா வகைக் கீரைகளையும் மிகவும் பிடிக்கும். தினமும் ஒருவகை கீரை உணவிலிருந்தால் மிகவும் பிரியம்.
அது எந்த அளவுக்கு என்றால் கீரை சாப்பிட்டே சிறுநீரகக்கல் வந்த அளவிற்கு!!!!!!!!!
. இவ்வளவு பிரியம் சிறிது சிறிதாக எனக்கு மறைய ஆரம்பித்தது. . காரணம் நான் உழவர் சந்தையில் சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியபோது மனிதர்களின் ஆரோக்கியத்தினைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அங்கு கீரை கொண்டு வரும் விவசாயிகள் எல்லாவகை உரத்தினையும் பூச்சிமருந்துகளையும் மனசாட்சி இன்றி உபயோகப்படுத்தி கண்ணைப் பறிக்கும் பசுமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு விற்பனையை செம்மையாக நடத்திவந்தனர்.
அதனை கைவிட விவசாயிகளின் பலமுறைகளில் முயன்றும் தோல்வியே பரிசாக கிடைத்தது.
எனக்கு தெரிந்தே அதிக கீரைகளை விரும்பி சாப்பிடும் வழக்கமுள்ள இருவர் புற்று நோய் வந்து இளம் வயதிலேயே சிரமப்பட்டு உயிரிழந்தனர். அவர்களுக்கு எவ்வித கெட்ட பழக்கம் இல்லை என்பது கூடுதல் தகவலாகும்.
தற்சமயம் மார்க்கெட்டில் விற்கப்படும் கீரைகளின் மூலம் புற்று நோய் உருவாக காரணம் யாதெனில் குறைந்த வயதுள்ள கீரைகளில் இடப்படும் யூரியா உரத்தினை பயிர் முழுமையாக செலவழிக்காமல் பயிரின் பாகத்திலேயே நிலை நிறுத்தி இருக்கும்பட்சத்தில் அவற்றினை உட்கொள்ளும் மனிதனுக்கு புற்று நோய் வரும் வாய்ப்புகள் பல மடங்காகும்.
நிலைமையின் தீவிரம் அறிந்தபோது கீரைகளையும் விட முடியவில்லை. மார்க்கெட்டில் விற்கப்படும் கீரைகளையும் சாப்பிட இயலவில்லை. விளைவு
. அதன்பின் எனது சிறிய வீட்டுத்தோட்டத்தில் கீரைகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து சாகுபடி செய்தேன்.
வீட்டிலுள்ள முருங்கை மரம் அதிக காய்கள் காய்த்தாலும் எனக்குப் பிடித்தது அதன் இலைகளே.
சக்குர்மேனிஸ் கீரை பச்சையாகவே சாப்பிட ஏற்றதாக இருந்ததால் அதுவும் தோட்டத்தில் சில குத்துக்கள் இடம் பிடித்தது
துாதுவளை சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள இயலும் என்றாலும் அதுவும் ஒரு மூலையில் சாகுபடியாகிறது.
கறிவேப்பிலை ஒரு பெரிய மரமே உள்ளது.
விரைவில் வளரும் வயதுடைய கீரைகளை தோட்டத்தில் தரை தளத்தில் வளா்த்து வந்தபோது உயரமான தண்ணீர் தொட்டியினை பிரயோசனமான முறையில் உபயோகப்படுத்த ஞானோதயம் ஏற்பட்டது. . அதற்காக வெவ்வேறு சில்பாலின் பிளாஸ்டிக் கொள்கலன்கள் வாங்கி தண்ணீர் தொட்டி மேல்பரப்பில் வைத்து சிறுகீரை- அரைக்கீரை- தண்டுக்கீரை –பசலைக்கீரை- கொத்தமல்லிகீரை-பொதினாக்கீரை ஆகியவற்றினை வளர்த்து வருகிறோம். . . சொந்தமாக வீட்டுத் தோட்டத்தில் தயாரித்த மண்புழு உரத்தினை மட்டுமே பிரத்தியோகமாக அவற்றிற்கு பயன்படுத்தி சாகுபடி நடை பெற்று வருகிறது. தற்சமயம் வீட்டில் இருக்கும் எங்கள் இருவருக்கும் மேற்கண்ட கீரைகள் போதுமானதாக உள்ளது.
எப்படியோ வயது ஆக ஆக உயிரின் மேல் பிடிப்பு மனிதனுக்கு அதிகமாகவே வருகிறது. எல்லோரும் ஒருநாள் இந்த உலகத்தைவிட்டுபோய்த்தான் ஆக வேண்டும் .இருந்தாலும் மரணம் நல்லபடியானதாகஇருக்கவேண்டும் என்ற ஆசைதான் இத்தனை முயற்சிக்கும் காரணமாக இருக்குமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????????????
No comments:
Post a Comment