Monday, 18 May 2015

பாட்டி வைத்தியம் :-

* நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும்.

* இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.

* குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.

* நாய் கடித் தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும்.

* ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும்.

* ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.

* அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.

* மஞ்சள் தூள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும்.

* அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

No comments:

Post a Comment