சர்வதேச மகிழ்ச்சி தினம்
இன்பம் எம்முள்ளே இருக்க அதைத் தொலைத்து விட்டு வெளியே தேடுவோர் அநேகமானோர் இக்காலத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பரபரப்பான இவ்வுலகில் கல்விக்கும், தொழிலுக்கும் பணத்திற்கும், மருந்துக்கும் என்று அதனைப் பெற்றுக்கொள்ள பறவையை விட வேகமாக பறந்தடித்துக் கொண்டு ஆணும் பெண்ணும் அல்லல் உறுகின்றனர். ஒருகணம் நாம் எவ்வளவுக்கு சந்தோசமாக இருக்கிறோம், என்று நினத்துப்பார்ப்பதில்லை. இன்றைய நாளிலாவது மகிழ்ச்சியாக இருப்போம் என எண்ணம் கொண்டு விட்டால் எமது வாழ்வில் இனிமைப்பூ பூக்கத்தொடங்கி விடும்.
மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.
No comments :
Post a Comment