WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Friday 6 October 2017

OCT062017 Latest News Headlines


இன்றைய​ செய்தி துளிகள்
Latest News Headlines




Sno
Time
News
01.
10.16PM
15 நாட்கள் கேட்டிருந்த நிலையில் சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் வழங்கியிருப்பது வருத்தமளிக்கிறது - கலைராஜன்
02.
10.15PM
பரோலில் வந்த சசிகலா சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது உறவினர் இல்லத்தில் தங்குகிறார்!
03.
10.12PM
பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்த சசிகலா சென்னை வந்தடைந்தார்!
04.
06.16PM
இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான விசாரணை அடுத்த வெள்ளி கிழமைக்கு (13-10-2017) ஒத்திவைப்பு!
05.
06.09PM
முதல்வரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 'டெங்கு' ஏன் சேர்க்கவில்லை?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி..
06.
11.21AM
மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை 2 நாட்களுக்குள் கைது செய்து ஆஜர்படுத்த சைதை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
07.
08.24AM
நிதியமைச்சர் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் ; சிறு வணிகர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
08.
08.23AM
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதி விசாரணை ; டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் நேரில் ஆஜராகின்றனர்..!
09.
08.22AM
வரலாறு காணாத கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு மக்கள் ; மின்னல் தாக்கியதில் மைசூரில் 6 பேர் உயிரிழப்பு..!
10.
08.21AM
மேலடுக்கு சுழற்சியால் தமிழகமெங்கும் பரவலாக மழை ; பாசனத்திற்கு உதவும் அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!
11.
08.20AM
தமிழக ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் பன்வாரிலால் புரோகித் ; உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்!

Thursday 5 October 2017

OCT052017 Latest News Headlines

இன்றைய​ செய்தி துளிகள்
Latest News Headlines

Sno
Time
News
01.
10.17PM
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திக்க நாளை பரோலில் வெளியே வருகிறார் வி.கே.சசிகலா!
அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்ககூடாது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தங்கவேண்டும் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளோடு சசிகலாவிற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்!
02.
09.39PM
டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
03.
09.35PM
திட்டக்குடி அருகே அகரம் என்ற கிராமத்தில் ஆட்டோவும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் நான்குபோ் படுகாயம். இருவர் உயிரிழப்பு.
04.
09.33PM
தொடரும் டெங்கு மரணம்: மேட்டூரை அடுத்த குள்ள வீரன்பட்டியை சேர்ந்த மீனவரின் மனைவி சத்யா டெங்கு காய்ச்சலுக்கு பலி.
05.
09.31PM
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்ட கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகளை ரோந்து போலீசார் தடுத்து நிறுத்தி பிடித்து மீண்டும் கேரளாவிற்கு அனுப்பினர்.
06.
09.26PM
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகர் ஜெய்-க்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு!
07.
04.43PM
கசுவோ இசிகுரோவுக்கு 2017ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
08.
01.25PM
சென்னை பெரம்பூரில் பெண் வேடமிட்டு வந்த மர்மநபர் மருத்துவர் ரம்யாவை குத்திவிட்டு தப்பியோட்டம்!
09.
11.59AM
பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை: வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் 23,000 பேர்
10.
11.58AM
அடுத்தடுத்து உயிர்பலி வாங்கும் டெங்குக்காய்ச்சல்: டெங்கு விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
11.
11.57AM
டெங்குவால் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக மு..ஸ்டாலின் தகவல்: கொளத்தூர் தொகுதியில் ஆரம்பசுகாதார நிலையங்களை ஆய்வு செய்த பின் பேட்டி
12.
11.56AM
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் நாளை காலை பதவியேற்பு: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
13.
11.55AM
அதிமுகவின் அனைத்து அணிகளும் விரைவில் ஒன்றிணையும்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நம்பிக்கை
14.
07.07AM
போலீசாரால் தேடப்பட்டுவந்த காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை ; சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்!
15.
06.18AM
மெர்சல் பெயரில் விஜய் நடித்த படம் வெளியாகுமா? ; வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!
16.
06.17AM
வரும் 9,10 ம் தேதிகளில் நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் இயங்காது ; லாரி உரிமையாளர் சம்மேளன முன்னாள் தலைவர் பேட்டி!
17.
06.16AM
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு ; 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என அறிவிப்பு!
18.
06.15AM
பரோல் கோரி கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா, மீண்டும் விண்ணப்பம் ; தமிழக அரசின் தடையில்லா சான்று கிடைக்காததால் பரோலில் விடுவிப்பதில் சிக்கல் நீடிப்பு!

Wednesday 4 October 2017

ஸ்பைடர் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: Spyder Box Office Collections


ஸ்பைடர் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்:


சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பிளாக்பஸ்டர் என்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் 6 நாட்களில் ஸ்பைடர் 106 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஸ்பைடர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.முதல் நாளே 51 கோடி வரை வசூல் செய்தது.

புகழ்பெற்ற இந்திய திரைப்படத் துறையின் ரமேஷ் பாலா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்பைடருக்கு தமிழிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஸ்பைடர் படத்தின் வசூல் விவரம் :
AP/TS – ₹ 53 Cr
TN – ₹16.5 C
KA – ₹11.5 C
KE – ₹2.5 C
ROI – ₹6.75 C
USA – ₹9.75 C
ROW – ₹6
C T – ₹ 106 Cr



பிரபல திரைப்பட இயக்குனர் AR முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் ஒரு படம் எடுப்பது ஒரு கடினமான பணி என்று இயக்குனர் கூறினார்.

மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் கஜினி மற்றும் துப்பாக்கியை உருவாக்க விரும்புகிறார் இயக்குனர் AR முருகதாஸ்.

ரகுல் ப்ரீத் கதாநாயகியாக​ நடிக்க​, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஹேரீஸ் ஜெயராஜ் இசையமத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் காட்சியில் பார்த்தபோது, ​​"படம் நன்றாக இருக்கிறது,திரைப்படம் நல்ல செய்தியைக் கொண்டுள்ளது." என்றார்.

OCT042017 Latest News Headlines


   இன்றைய​ செய்தி துளிகள்
Latest News Headlines



Sno
Time
News
1.
08.14PM
“பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது -பிரதமர் மோடி
2.
08.09PM
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து முறைப்படி தகவல் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வாதம்: வழக்கினை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
3.
08.07PM
மக்கள் தங்கள் பக்கம் இருக்கும் வரை, ஆட்சியை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது: கரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
4.
03.44PM
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
5.
03.20PM
தனது பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை நடிகர் கமல் வெளியிடுவார் என தகவல்
6.
01.48PM
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!
7.
12.28PM
பொய் வழக்குகள் மூலம் தமிழக அரசு மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கை.
8.
12.27PM
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை
9.
11.49AM
சபாநாயகர் உத்தரவு தவறானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அதிக முரண்பாடுகள் நிறைந்தது - தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்!
10.
11.36AM
#BREAKING | கட்சிமாறி வாக்களித்த .பி.எஸ் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய திமுக வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ் - விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
11.
11.14AM
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; தகுதி நீக்கம் செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது - உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் பதில் மனு!
12.
11.01AM
தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த கமலஹாசன் ரசிகர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை!
13.
09.20AM
கழகமும், சின்னமும் எங்களுக்குத்தான் - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை!
14.
07.53AM
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி - மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெறுகிறார்!
15.
06.25AM
தருமபுரி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை...
16.
06.23AM
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்,னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மேதிக்கொண்ட விபத்தில் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழப்பு
17.
01.11AM
திண்டுக்கல் சவேரியார் பாளையத்தை சேர்ந்த இருவர் பல்வேறு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததின் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..
18.
01.10AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
19.
01.09AM
திருப்பதி அருகே செம்மரம் வெட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் கைது. அவரிடமிருந்து ரூ 5 லட்சம் மதிப்புள்ள 8 செம்மரக்கட்டைகள் பறிமுதல்.
20.
01.08AM
திருவள்ளூர் மாவட்டம் பானம்பாக்கத்தில் எம். படித்துவிட்டு மருத்துவம் பார்த்த ஒருவர் கைது!
21.
01.06AM
திருவள்ளூர் கிளாம்பாக்கபாக்கத்தில் இடி தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Thursday 28 September 2017

நடிகர் தனுஷ் உடன் இணையும் ப்ரேமம் நாயகி Actor Dhanush acts with Next Premam Heroin


நடிகர் தனுஷ் உடன் ஏற்கனவே ப்ரேமம் படத்தில் நடித்த​ கதாநாயகிகளில் ஒருவரான​ அனுபமா பரமேஸ்வரன் உடன் கொடி படத்தில் நடித்தார்.


அவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியான மடோனா செபஸ்டியன் உடன் தனுஷ் இயக்கிய​ பா பாண்டி படத்தில் நடித்தார்.


தற்போது அவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியான சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக​ நடிக்கிறார்.இதனை தனுஷின் வுண்டார்பார் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இப்படத்தில் டொவைணொ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.


Related Posts Plugin for WordPress, Blogger...